பிரதமர் மோடியை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!
டெல்லியில் பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியதாக 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் நமது குழந்தைகளின் தடுப்பூசிகளை எதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர்களை ஒட்டியதாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. போஸ்டர்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு புகார் கொடுக்கப்பட்டால் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யார் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.






