--- --:--:-- --

வீட்டை விட்டு வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம்..!

4

வீட்டை விட்டு வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியில் பெருந்தொற்று பரவலால் சில இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பது தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது போன்றவை குற்றச் செயல்களாக கருதப்பட்டு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இரண்டாவது அலை தீவிரத்தால் புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது பொதுமக்கள் சிலர்எவ்வித காரணமும் இன்றி பொது இடங்களில் கூடுவதும் சுற்றித் திரிவதும் கவலை அளிப்பதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

 

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கின்பது எவ்வித காரணமுமின்றி அடையாள அட்டை இல்லாமல் வெளியே திரிபவர்கள் மீது 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon