கேரளாவில் நான்கு மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு..!
கேரளாவில் நான்கு மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இன்று நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றார்.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் காணப்படும் பூஞ்சை தொற்று கேரளத்திலும் காணப்படுகின்றன என்றும் இது தொடர்பான மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.






