--- --:--:-- --

வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்..!

7

சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் 30 வயது மகன் கமலக்கண்ணன்.

 

ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றினார். மன அழுத்தம் ஏற்பட்டதால் மருத்துவ விடுப்பில் சென்ற கமலக்கண்ணன் விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பவில்லை.

 

காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காத நிலையில் படுக்கையறை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி விட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon