தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று முக்கிய ஆலோசனை..!
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.
வாக்கு எண்ணிக்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முகவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் என்றும், ஒரு வேட்பாளர்களுக்கு எத்தனை முகவர்கள் இருக்கப் போகிறார்கள் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் துணை முகவர் என இரு நபர்கள் இருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.






