--- --:--:-- --

திரையரங்குகளில் இரவு நேர காட்சி ரத்து..!

9

கொரொனா பரவலை கட்டுபடுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் திரையரங்குகளில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் சூழலில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

 

அதில் திரையரங்குகளை மூடலாமா அல்லது காட்சிகளின் நேரத்தை மாற்றி அமைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் 10 நாட்களுக்கு படம் திரையிடும் நேரத்தை மாற்றி அமைத்து திரையரங்குகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இரவு காட்சிகளை தவிர்த்து காலை, மதியம், மாலை காட்சிகள் வரை திரையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon