காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கொரொனா தொற்று உறுதி..!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. கொரொனாவுக்கான சில அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரொனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
இந்தியாவில் கொரொனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களுக்கான கொரொனா பரவல் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.






