--- --:--:-- --

முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த நடிகர் மன்சூரலிகான்..!

1

கொரொனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான படகில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூரலிகான் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். தடுப்பூசி குறித்தும் அரசியல்வாதிகள் குடித்து மன்சூர் அலிகான் அவதூறாகப் பேசியது குறித்து மாநகராட்சி ஆணையர் புகார் அளித்திருந்தார்.

 

 

அதனடிப்படையில் வடபழனி காவல் நிலையத்தில் மன்சூரலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

உள்நோக்கத்துடன் தடுப்பூசி குறித்து அவதூறாக பேசவில்லை என்றும் தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தான் கூறினேன் எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon