--- --:--:-- --

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும்..!

11

கொரொனா பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

நாட்டில் அதிகரித்துள்ள கொரொனா பரவல் தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது உட்கட்சி தேர்தலை நடத்துவது போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon