--- --:--:-- --

கர்ணன் திரைப்படம் ஓடும் திரையரங்கத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!

12

தூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் ஓடும் திரையரங்கத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

தூத்துக்குடி கோல்டன் புரத்தில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு படம் பார்க்க வந்த 5 பேர் மது அருந்தி இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. படம் பார்க்க அனுமதிக்காத தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.

 

பெட்ரோல் குண்டுகள் தரையில் விழுந்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசி அவர்களை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon