தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரும்..!
தமிழகத்தில் வெப்பநிலை உயர்வால் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் 4 முதல் 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. வெப்பச் சலனத்தால் மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிக அளவு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த அளவு வெப்பநிலை 28 டிகிரியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





