இலைகளை உடையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்..!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெரியசாமி இலைகளை உடையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்கள் நீதி மையம் கூட்டணியில் இந்த தொகுதியில் போட்டியிடும் அவர் வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது உடல் முழுவதும் இலைகளை கட்டிக்கொண்டு வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் கட்சி நிர்வாகிகளுடன் நடனமாடியும் அவர் வாக்கு சேகரித்தார்.






