மிரட்டல் பேச்சு… அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு!
திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார். கரூர் தொகுதி திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி களமிறங்கி இருக்கிறார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியை மிரட்டும் வகையில் அண்ணாமலை பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில கடந்த இரு நாட்களாக வைரலானாது.
அரவக்குறிச்சி அருகே பூமதேவம் பகுதியில் வாக்குச் சேகரித்தபோது அண்ணாமலை பேசிய அந்த வீடியோவில், “திமுகவின் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வெளியே வந்துவிடும். நான் இங்குள்ள திமுகவினருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வன்மத்தைக் கையில் எடுக்கத் தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதைக் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்றார்.
இந்த வீடியோ திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த வீடியோ தொடர்பாக, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி நேற்று புகார் அளித்தார். அதன்பேசில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் (153), கொலை மிரட்டல் (506/1), தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது இன்று (ஏப்.02) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




