--- --:--:-- --

செந்தில் பாலாஜி ஒரு எட்டப்பன்: கரூர் பிரசாரத்தில் முதல்வர் ஈபிஎஸ் காட்டம்!!

EPS 07

கரூரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி ஒரு எட்டப்பன்; அவருடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று, கரூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

 

ஒருகாலத்தில் அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி, அக்கட்சியில் மாவட்ட ரீதியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவிய செந்தில்பாலாஜி, கொஞ்ச நாளில் தி.மு.கவில் ஐக்கியமானார்.

 

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் கரூர் தொகுதியில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார்.

 

இச்சூழலில், கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது: திமுக குடும்பக் கட்சி. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கார்ப்பரேட் கம்பெனியில யார் வேண்டுமானாலும் ஷேர் போடலாம். இப்போது செந்தில்பாலாஜி ஷேர் போட்டுள்ளார்.

 

அ.தி.மு.கவை கவிழ்ப்பதற்காக செந்தில்பாலாஜி சென்றார். அன்று எட்டப்பன் இருந்தார் இன்றைக்கு செந்தில்பாலாஜி எட்டப்பனாக உள்ளார். வீரப்பாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தவர் எட்டப்பன். இன்றைக்கு இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சதி செய்த இந்த செந்தில்பாலாஜி. அவருடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது. தர்மம், நீதி வென்றதாக தான் சரித்திரம் உண்டு. அதர்மம் வென்றதாக சரித்திரம் இல்லை என்று முதல்வர் பழனிச்சாமி பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon