12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் போடுமாறு ஓபிஎஸ்சிடம் கேட்ட மாணவர்கள்..!
தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள் கூற முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சீலையம்பட்டியில் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாஸ் போட்டு விடுங்கள் ஐயா எனக் கேட்டனர்.
அதற்கு தமிழக முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்கள் அமைத்துக் கொடுக்குமாறு கேட்டதற்கு சொந்த செலவில் உருவாக்கப்படும் என அவர் பதிலளித்தார்.






