துணி துவைத்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்..!
நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாகூர் வண்டிபேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்மணி ஒருவர் துணி துவைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவர் அவரை நகரச் சொல்லிவிட்டு அதில் ஒரு துணியை துவைத்து கொடுத்துள்ளார்.
துவைக்கும் இடத்தில் அமர்ந்து துணிக்கு சோப்பு போட்டுத் துவைத்து அலசிப் பிழிந்து அனைவரையும் ஈர்த்துள்ளார். மறந்துவிடாமல் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
நாகூரில் அதிமுக வேட்பாளர் வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்சிகள் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் போது, வாக்காளர்களுக்கு உதவுவது போல தேர்தல் முடிந்த பின்னரும் தொகுதி பக்கம் வந்து துணிகளை துவைத்து தராவிட்டாலும் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பு.






