--- --:--:-- --

தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக களமிறங்கும் பிரபல நடிகர்!

Mansur alikhan

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து, தமிழ் தேசியப்புலிகள் கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார்.

 

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், கடந்த மக்களவைத் தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது, திண்டுக்கல் தொகுதியில் களமிறங்கிய அவர், குப்பை அள்ளிப் போட்டார்; வண்டி இழுத்து தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்க முற்பட்டார். எனினும் அந்த தேர்தலில் மன்சூர் அலிகான் தோல்வி அடைந்தார்.

 

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சட்டசபை வேட்பாளராக போட்டியிட மன்சூர் அலிகான் விருப்பம் தெரிவித்தார். ஆனால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பு தரவில்லை.

 

இதனால் அதிருப்தி அடைந்த மன்சூர் அலிகான், பிப்ரவரி மாத கடைசியில் தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளதாக அறிவித்தார். சீமான் மீது அதிருப்தியில் இருந்த வேறு சில நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் மன்சூர் அலிகானுடன் இணைந்துள்ளனர்.

 

இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட உள்ளார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக அவர் போட்டியிட தீர்மானித்துள்ளார். நாளை காலை தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. தனது கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் தரப்படவில்லை என்பதால் சுயேட்சையாக மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். தொண்டாமுத்தூரில் அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon