ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் கிடந்த தவளை..!
கள்ளக்குறிச்சியில் ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் தவளை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்த சிவனேசன். இவர் அந்த பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட் வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு சென்று பால் காய்ச்சுவதற்கு திறந்தபோது அதில் இறந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவனேசன் பால் முகவர் பாஸ்கர் என்பவரிடம் பெற்றுள்ளார்.
விழுப்புரம் மண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் இது தொடர்பாக பால் முகவர் பாஸ்கர் தகவல் அளிக்க சிவனேசன் வீட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக கூறப்படும் விவகாரம் ஆவின்பால் நுகர்வோரை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.






