சட்டசபைக்குள் சட்டையை கழற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..!
கர்நாடக சட்டசபைக்குள் சட்டையை கழற்றி காட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக நடந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வக்ரகதி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு சென்று சட்டையை கழற்றி உள்ளார்.
இதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரமேஷ் அவர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷை வரும் 12ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.






