--- --:--:-- --

பேஸ்புக் காதல்..! தனிமையில் இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டிய நபர்..!

3

புதுச்சேரியில் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி காதலியிடமும் அவரது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கல்லூரி மாணவிக்கு செங்கல்பட்டை சேர்ந்த கார்த்திக் என்பவன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். சென்னை கல்லூரி மாணவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட கார்த்திக்கும் அந்த பெண்ணும் காதலிக்க தொடங்கி தனிமையில் சந்தித்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளனர்.

 

ஒரு கட்டத்தில் கார்த்திக் பத்தாம் வகுப்பைக் கூட தாண்டாதவன் என்பது தெரியவந்து, அவரிடமிருந்து மாணவி பிறகு ஒதுங்கிய நிலையில் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி பணம் கறக்க தொடங்கியுள்ளார்.

 

மாணவியின் தந்தைக்கு விஷயம் தெரிய வந்த நிலையில் அவரிடமும் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார் கார்த்திக்.அவர் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon