--- --:--:-- --

இந்தியாவில் தனது முதல் ஆலையை சென்னையில் தொடங்குகிறது அமேசான் ..!

2

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சர்வதேச ஆன்லைன் பல்பொருள் விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க உள்ளது.

 

நடப்பாண்டின் இறுதிக்குள் அமேசானின் சென்னை ஆலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் தனது முதல் ஆலையை அமேசான் தொடங்க உள்ளது.

 

அதன் இந்திய தலைவர் அமித் அகர்வால் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். அமேசான் சென்னையில் அமைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை சுயசார்பு இந்தியா திட்டத்தின் முக்கிய அடையாளமாக இருக்கும் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon