எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்..!
தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு சென்னை மணலி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் எரிபொருளில் கந்தகத்தை நீக்கியல் பிரிவு ஆகியவற்றிற்கு பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர நாகையில் அமையவிருக்கும் காவிரிப்படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இதனையடுத்து சமூக பொருளாதாரப் பயன்கள் அதிகரித்து தற்சார்பு நிலையை நோக்கி நாடு நடைபோட முடியும் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






