--- --:--:-- --

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வருகிறார்..!

8

ட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8
அதிகாரிகள் இன்று தமிழகம் வருகின்றனர்.

 

காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் பதினோரு மணிக்கு சென்னையை வந்தடைகின்றனர். அதனை தொடர்ந்து அந்த குழு அரசியல் கட்சிகள், தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

 

வியாழன் அன்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலர் உள்ளிட்டோர் உடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குழு ஆலோசனை நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே புதுச்சேரி புறப்பட்டு அங்கு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

 

.பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை வழியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குழு கேரளா செல்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon