--- --:--:-- --

நவ ஜோதிர் லிங்கங்களை தரிசிக்க சிறப்பு ரயில் இயக்கம்..!

5

காசிவராத்திரி விழாவிற்கு இந்தியாவில் நவ ஜோதிர் லிங்கங்களை தரிசிக்க சிறப்பு ரயில்களை இயக்கும் ரயில்வே துறை பள்ளிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்திய ரயில்வே, உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாரத தரிசனம் சிறப்பு ரயிலை இயக்கி வருகிறது. மகாசிவராத்திரியை ஒட்டி நவஜோதிர லிங்க யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

 

மார்ச் 8 ஆம் தேதி நெல்லையில் புறப்பட்டு மதுரை, சென்னை வழியே மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள 9 ஜோதிர லிங்கங்களை தரிசிக்கும் விதமாக 13 நாட்களுக்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 

இதற்கு ஒரு நபருக்கு 15,350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவு செய்துகொள்ள 82879 31977 மற்றும் 82879 31964 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon