--- --:--:-- --

தமிழகத்தின் 5வது புலிகள் சரணாலயமாக மேகமலை அறிவிப்பு..!

4

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 51வது மற்றும் தமிழகத்தின் 5வது புலிகள் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேனி வனக்கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு மேகமலை சரணாலயம் உருவாக்கப்பட்டது. மேகமலையில் புலிகள் தென்படுவதால் இதனை புலிகள் சரணாலயமாக மாற்ற பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வனத்துறை பரிந்துரை செய்திருந்தது.

 

அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும் பகுதி புலிகள் சரணாலயமாக மாறிவிடும் என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டன. மத்திய அரசு தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க அனுமதி வழங்கியது.

 

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு 63 ஆயிரம் வகையான பாலூட்டிகள், 323 பறவையினங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon