ஜோபைடனும், பிரதமர் மோடியும் ஒருங்கிணைந்து செயல்பட போகிறார்கள்..!
கொரோனா தடுப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி பூண்டு உள்ளனர். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி நேற்று இரவு தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
இதன் பின்பு வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை பராமரிக்கவும், இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் உலக பொருளாதாரத்தை மறு சீரமைக்கவும், பிரதமர் மோடியும், பைடனும் இணைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட் எனப்படும் இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஜப்பான் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசியதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த சந்திப்பிற்கு பின் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி இந்த அழைப்பின் போது எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும் பருவநிலை மாற்றம் விவகாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பேசியதாகவும் பிரதமர் தன் பதிவில் கூறியுள்ளார். பதவியேற்ற பிறகு அவருடன் பிரதமர் மோடி தற்போதுதான் முதல் முறையாக உரையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஆட்சி மாறிய பின்பு இரு நாட்டு நல்லுறவை தொடங்குவது என்று இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






