விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசாணை..!
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகள் பெற்ற மொத்த 12,110 கோடியே 74 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அறிவிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான நிதி அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் எனவும் பயிர்க் கடன் தள்ளுபடி செயலாக்கும் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






