--- --:--:-- --

சசிகலா இன்று தமிழகம் வருகிறார்..! அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!

5

சிறை தண்டனை காலம் முடிந்து சசிகலா இன்று தமிழகம் புறப்படும் நிலையில் அதிமுக கொடி பொருத்தப்படுத்தப்பட்ட காரிலே அவர் பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நிலையில் அதிமுக அலுவலகம் ஜெயலலிதா நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து கடந்த 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். எனினும் கொரொனா பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஏற்கனவே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போதும் அதிமுக கொடி பொருத்திய காரில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் திரும்பும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என டிஜிபி அலுவலகத்தில் இரண்டு முறை அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த சசிகலா. டிடிவி தினகரன் தரப்பு முயற்சிப்பதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

 

சசி.கலாவுக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் குவிவார்கள் என்றும் கூறியுள்ளது. இது ஒருபுறமிருக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon