இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தைவிட இரு மடங்கு வேகத்தில் உருகுகிறது..!
இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தைவிட இரு மடங்கு வேகத்தில் உருகுவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இமயமலையில் மேற்கிலிருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஏறத்தாழ 650 பனிப்பாறைகளின் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களின் புகைப்படங்களை கொண்டு இருபதாம் நூற்றாண்டில் இமய மலைப் பாறைகளில் நிலைமை ஆராயப்பட்டது.
மேலும் இந்த படங்கள் 2000 ஆண்டுக்குப் பிந்தைய அதிநவீன செயற்கை கோள்களில் இருந்து ஒளியியல் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டில் இமயமலை பனிப்பாறைகள் உயரம் குறைந்து இருப்பது நேரடியாக தெரியவந்துள்ளது.






