காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை..!
சர்வதேச எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.சம்பா பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் நாட்டவரின் ஊடுருவல் இருப்பதை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.
திரும்பிச் செல்லும்படி பலமுறை எச்சரித்த போதிலும் அவர் மீண்டும் மீண்டும் எல்லையில் உள்ள தடுப்புவேலியை நோக்கி ஆக்ரோஷமாக நடந்து வந்துள்ளார். இதனை அடுத்து அந்த நபரை எல்லை பாதுகாப்பு பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அவரைப் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக காஷ்மீர் படையினர் கூறுகின்றனர்.






