--- --:--:-- --

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயார்..!

5

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்தரகாண்டில் பாறை உடைந்து நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

வெள்ளப் பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் அரசின் சார்பிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon