ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு..!
புதுக்கோட்டையில் ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை ஈன்ற அதிசய ஆட்டை கீரமங்கலம் பகுதியை சேர்ந்த கிராமத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலமற்றவர்களின் பொருளாதார மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவது வெள்ளாடு ஒரு முக்கியத்துவமான அங்கமாக விளங்குகிறது.
ஊரகப் பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாவகமான தொழிலாகும். வெள்ளாட்டுப் பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக்கூடிய தன்மையுடையதால் தாய்ப்பாலுக்கு அடுத்த சிறப்புடையதாக பார்க்கப்படுகிறது.






