--- --:--:-- --

பிரதமர் மோடியின் மனதின் குரல் பதிவுக்கு பிரபல பாலிவுட் நடிகைகள் ஆதரவு..!

12

பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் பதிவுக்கு பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், கரீனா கபூரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

மனதின் குரல் நிகழ்ச்சியில் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தை இயக்கிய பெண் விமானிகளை பிரதமர் மோடி பாராட்டி அவர்களுக்கு நாடு சல்யூட் செய்கிறது எனக் குறிப்பிட்டார்.

 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கரீனா கபூர் இடைநிறுத்தமில்லா விமானங்களை இயக்குவது முதல் டெல்லி குடியரசு தின பேரணியில் பங்கேற்பது வரை இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

 

விடுதலை குறித்த மகாத்மா காந்தியின் கருத்தை குறிப்பிட்டுள்ள தீபிகா படுகோன் அதை இந்திய சாதனை பெண்கள் நிரூபித்து உள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon