கர்ப்பிணியை அழைக்க சென்ற ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது..!
கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து வரச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணி நேரம் தவித்த சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இன்று ஒரே நாளில் இருநூற்றுக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற்றது. புதுமண தம்பதியை வாழ்த்த ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த வழியில் கர்ப்பிணியை குறித்த நேரத்தில் அழைத்து வர முடியாமல் வேறு வாகனத்தை அனுப்பி வைத்து விட்டு 108 ஆம்புலன்ஸ் மீண்டும் கடலூருக்கு திரும்பியுள்ளது.






