--- --:--:-- --

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் வருகிற 28 ஆம் தேதி திறப்பு..!

8

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை வருகிற 28-ஆம் தேதி திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

 

பின்னர் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டனர்.

 

பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 28-ஆம் தேதி ஜெயலலிதா நினைவு இல்லத்தை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

 

இது பொதுமக்களின் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 27ஆம் தேதி சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon