காங்கிரஸ் கட்சியின் அன்பை மதிக்கிறேன்..! ஆனால் கூட்டணி குறித்து பேச நேரம் இதுவல்ல..!
காங்கிரஸ் கட்சியின் அன்பை மதிப்பதாகவும் ஆனால் கூட்டணி குறித்து பேச நேரம் இதுவல்ல எனவும் மக்களின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் சார்பில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஊராட்சிகளுக்கான உறுதிமொழிகளை வெளியிடும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
அதில் காணொளி மூலம் கலந்துகொண்ட கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.






