ஆணும், பெண்ணும் இணைந்து கோவிலில் செய்த காரியம்..!
திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கோவில் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட தம்பதி குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் அதிகளவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வட மதுரை மேற்கு ரத வீதி பகுதியில் உள்ள கோவிலில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த உண்டியலை ஆணும் பெண்ணும் இணைந்து திருடி வேட்டிக்குள் மறைத்து வைத்து எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






