அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று..!
சேலத்தில் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியை 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாணவியரை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு அவருக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.






