4 கிலோ நான் வெஜ் உணவை சாப்பிட்டால் ராயல் என்பீல்டு பைக் இலவசம்..!
கொரொனா காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 4 கிலோ உணவை சாப்பிட்டால் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசம் என்று ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ளார். புனே நகரத்தில் அப்துல் மாலிக் என்பவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரின் ஹோட்டலில் பிரம்மாண்ட தட்டுகளில் வழங்கப்படும் நான் வெஜ் பிரபலம். ஸ்பெஷல் சாப்பாடு 16 வகை உணவு வகைகள் இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு ரகமும் ரூபாய் 2500 மதிப்பு.
இதன் காரணமாக இவரின் ஹோட்டலில் உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நான்கு கிலோ எடை கொண்ட உணவுகளை 1 மணி நேரத்தில் காலி செய்தால் ராயல் புல்லட் பைக் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பிளேட்டில் 12 வகையான 401 வகைகள் இடம்பெற்றிருக்கும் . சிக்கன் தந்தூரி, ட்ரை மட்டன் கிரேவி, மட்டன் சிக்கன் மசாலா உணவுகள் இருக்கும். 55 சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பிரம்மாண்ட உணவை தயார் செய்வார்கள். ஒரு மணி நேரத்தில் இதை காலி செய்தால் 1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக கிடைக்கும்.






