--- --:--:-- --

வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டடம் தொடக்கம்..!

10

ந்திராவில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கியிருந்தார்.

 

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த நவரத்தின திட்டங்களில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டம் ஒன்று.

 

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல 830 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனங்களில் செயல்பாட்டை விஜயவாடாவில் ஜெகன்மோகன் ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார்.

 

மாநிலத்தில் 50 வீடுகளுக்கு ஒரு நபர் சுய உதவிக்குழு பணியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon