--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போட்டது போல் நடித்த மாவட்ட நலவாழ்வு அதிகாரி, கல்லூரி முதல்வர்!

11

ர்நாடகத்தின் டும்கூரில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக பொய்யாக படம் பிடித்துக்கொண்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரி, செவிலியர், கல்லூரி முதல்வர் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

தும்கூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போது மாவட்ட நலவாழ்வு அதிகாரி, அரசு செவிலியர், கல்லூரி முதல்வர் ரஜினி ஆகியோர் உடலில் தடுப்பூசி போட்டுக் கொண்டது போல் படம் பிடித்தனர்.

 

உடலில் படும்படி ஊசியை வைத்துக் கொண்டு அதை போடாமல் பொய்யாக படம்பிடித்து வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறும் படங்களும் வீடியோக்களும் மட்டுமே மருந்தின் செயல் திறனை நிரூபிக்கும் சான்றாகி விடாது என பலரும் தெரிவித்துள்ளனர்.

 

மக்களை ஏமாற்றிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon