--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழப்பு..!

1

நார்வேயில் பைசர் நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தடுப்பூசி எடுத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே முதியவர்கள் 23 பேர் பலியானதாகவும் இதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பைசர் தடுப்பூசிக்கும், இந்த மரணத்திற்கும் நேரடி தொடர்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனக்கூறும் மருத்துவ நிபுணர்கள் இருந்து 23 பேரில் 13 பேருக்கு வயிற்றுப் போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்றவை பொதுவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon