--- --:--:-- --

கொரோனா தடுப்பூசி பணி தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்தன்..!

6

கொரோனா தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்னை வந்துள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

 

இந்த நிலையில் சென்னை வந்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள மத்திய மருந்து பகுப்பாய்வு ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

 

இதையடுத்து தடுப்பூசி ஒத்திகை பணிகளையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் செங்கல்பட்டு செல்லும் அமைச்சர் அங்கு உள்ள தடுப்பூசி மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon