--- --:--:-- --

மூன்று குழந்தைகளை பெற்றால் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு..!

Baby

தென் கொரியாவில் மூன்று குழந்தைகளை பெறும் தம்பதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சௌத்ஜியாங்சாங் மாகாணத்தில் சேங்வோ நகரில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 

நகரில் உள்ள அனைத்து திருமணமான தம்பதியினருக்கும் 92 ஆயிரம் அமெரிக்க டாலர் கடனாக வழங்கப்படுகிறது.

 

குழந்தை பெறும் தம்பதியினர் முதல் குழந்தை பெற்றால் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும், இரண்டாவது குழந்தையை பெற்றால் கடன் தொகையும் 30% தள்ளுபடி செய்யப்படும் என்றும், மூன்றாவது குழந்தை பெற்றால் முழு தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon