திரையரங்குகள் போன்ற மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது பெருந்தொற்றை அதிவேகமாக பரப்பும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது தற்போது திரைத் துறையினரின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோரின் படங்கள் வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் திரையரங்குகள் போன்று மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது பெருந்தொற்றை அதிவேகமாக பரப்பும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக திரையரங்குகள் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட செய்தியை பதிவிட்டுள்ளார்.
இது 2021 ஆம் ஆண்டு என்று நாம் நினைக்கலாம் ஆனால் பெருந்தொற்றுக்கு அது தெரியாது என்பதால் தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளார். எனவே முகக் கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூகப் பணிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
திரையரங்கம் போன்று மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது பற்றி அதிகமாக பரவும் என்று எச்சரித்துள்ளார். இதுபோன்ற இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.