ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினால் கடும் நடவடிக்கை..!

டிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 10ம்தேதி சிலர் ஆராதனை போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஜினி மக்கள் மன்றம் வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் மன்றத்தினர் யாரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மீறி போராட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


Leave a Reply