சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததற்காக மீண்டும் கைது செய்திருப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறையில் இருக்கக்கூடிய ஹேம்நாத்திற்கு அது தொடர்பாக அந்த அறிவிப்பாணை வழங்கப்படும். அவர் அங்கிருந்து மீண்டும் இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
மேலும் செய்திகள் :
கோயிலை தரை மட்டமாக்கி பிள்ளையார் சிலையை ஜேசிபியில் எடுத்துச் சென்று அதிகாரிகள் கொந்தளித்த மக்கள்..!
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
தேனியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செயலால் நோயாளி அவதி..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!
சாலையை கடந்த பெண் பேருந்து மோதி உயிரிழப்பு..!
எங்க மாமா போலீஸ்..கை வச்சா வெட்டுவேன் பாரு..மிரட்டல்..!