நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம்..!

நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக் கோரி அங்கு போராட்டம் நடந்து வருகின்றன. தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க கோரி அரசரின் கண்காணிப்பில் செயல்படும் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மன்னராட்சி முறையில் இருந்து வந்த நேபாளம் கடந்த 2015ஆம் ஆண்டு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆளும் கட்சியாக உள்ள நேபாள கம்யூனிச கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பிரதமர் கே.பி ஒளிக்கு மூத்த தலைவரான புஷ்ப கமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

 

இதனையடுத்துக் கே.பி. ஒளி நாடாளுமன்றத்தை கலைத்து உள்ளார். சில மாதங்களில் நேபாளத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ள உள்ளது. இதனால் நேபாளத்தில் அரசியல் சிக்கல் எழுந்துள்ள நிலையில் அதனை இந்து நாடாக அறிவிக்கக் கோரும் போராட்டங்களும் தீவிரமடைந்தது.


Leave a Reply