தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதலாவதாக சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரம் தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது. இன்று சென்னை, பூந்தமல்லி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் 17 மையங்களில் ஒரு மையத்தில் 25 பேர் வீதம்இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கான ஒத்திகை நடத்தப்பட உள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.