சிறுமியை நடு வழியில் விட்டுச்சென்ற தாய்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை எம்பிபிஎஸ் மருத்துவராக இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட அவரது தாயே கைவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

 

தண்டுக்காரன்பாளையத்தில் நேற்று மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி குறித்து விசாரித்த போலீசார் சிசிடிவி பதிவின் அடிப்படையில் சிறுமியுடன் வந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் பெங்களூரை சேர்ந்த சைலஜா குமாரி என்பதும் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்பதும் தெரியவந்தது.

 

வழக்கு கொரோனா காலத்தில் மருத்துவ தொழில் பாதிப்பு என மனம் உடைந்த நிலையில் மகளையும் அழைத்துக்கொண்டு பேருந்து மூலம் திருப்பூர் வந்துள்ளார். வழினியில் சிறுமி ஒவ்வாமையால் வாந்தி எடுத்த நிலையில் ஒரு பாட்டில் சிரப் மருந்தை சிறுமிக்கு கொடுத்து அவர் தூங்கியவுடன் அங்கேயே விட்டுவிட்டு அவர் உள்ளார்.

 

அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தான் எலி மருந்து சாப்பிட்டு தருவதாக கூறியதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply